இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் டிச.17 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகள் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.
இந்நிலையில் இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான முதல் பயிற்சி ஆட்டம் கடந்த டிச.6ஆம் தேதி தொடங்கி டிச.8 ஆம் தேதி முடிவடைந்த இப்போட்டி டிராவில் நிறைவடைந்தது.
இதற்கிடையில் ஆஸ்திரேலிய ஏ அணியின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய புகோவ்ஸ்கி, இந்திய வேகப்பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகி வீசிய பவுன்சரில் காயமடைந்தார். இதையடுத்து அணியின் மருத்துவர் களத்திற்கு வந்து புகோவ்ஸ்கியை பரிசோதித்தார்.
பயிற்சி ஆட்டத்தின் போது காயமடைந்த புகோவ்ஸ்கி பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக புகோவ்ஸ்கி ஆட்டத்திலிருந்து பாதியிலேயே விலகினார். இதனையடுத்து வருகிற 10ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாவது பயிற்சி ஆட்டத்திலிருந்து புகோவ்ஸ்கி விலகுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நடத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர், காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வில் புகோவ்ஸ்கி களமிறங்குவார் என்ற நம்பிக்கையுள்ளதாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கம்மின்ஸ், “வில் புகோவ்ஸ்கி காயமடைந்திருப்பது நிச்சயம் ஏமாற்றத்தை தந்துள்ளது. இருப்பினும் கிரிக்கெட்டை பொறுத்தவரை நீங்கள் காயமடைவது உங்களது கையில் இல்லை. ஏனெனில் இந்த விளையாட்டை பொறுத்தவரை உங்களுக்கான தடைகள் அதிகம் இருக்கும். அதில் ஒன்று தான் நீங்கள் காயமடைவது.
ஆனால் புகோவ்ஸ்கி ஒரு சிறந்த வீரர். அவர் முதல் தர கிரிக்கெட்டில் பல சிறப்பான ஆட்டங்களை தந்துள்ளார். தற்போது அவர் ஆஸ்திரேலியாவுக்கான அணியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். என்னைப் பொறுத்தவரை புகோவ்ஸ்கி, இந்திய அணிக்கெதிரான முதல் போட்டியில் களமிறங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'18 ஆண்டுகள் கிரிக்கெட் பயணம் நிறைவு': ஓய்வு அறிவித்த பார்தீவ் பட்டேல்