தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரஞ்சி கோப்பை: இமாச்சலிடம் தடுமாறிய தமிழ்நாடு..! பேட்டிங்கில் மீண்டும் சொதப்பிய இமாச்சல்! - ரஞ்சி கோப்பை டெஸ்ட் போட்டி

திண்டுக்கல்: தமிழ்நாடு - இமாச்சலப் பிரதேசம் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை டெஸ்ட் போட்டியில் தமிழ்நாடு அணி, தனது முதல் இன்னிங்ஸில் 96 ரன்களுக்கு சுருண்டது.

tamilnadu vs himachal ranji trophy match update
tamilnadu vs himachal ranji trophy match update

By

Published : Dec 19, 2019, 11:44 AM IST

2019-20 ஆண்டுக்கான ரஞ்சி கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், குரூப் ஏ, பி பிரிவுக்கான இரண்டாம் சுற்றுப் போட்டியில் தமிழ்நாடு அணி, இமாச்சலப் பிரதேச அணியை எதிர்கொண்டது.

இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இமாச்சலப் பிரதேச அணி, தமிழ்நாடு அணியின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் முதல் இன்னிங்ஸில் 158 ரன்களுக்குச் சுருண்டது.

தமிழ்நாடு அணி தரப்பில் அஸ்வின் ஐந்து, சாய் கிஷோர் மூன்று, கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய தமிழ்நாடு அணி, இமாச்சலப்பிரதேச அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.

தமிழ்நாடு அணியில் அபினவ் முகுந்த், கே.முகுந்த், அபாரஜித், ஷாரூக்கான், ஜெகதீசன் என நட்சத்திர வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களோடு வெளியேறினார். இதனால் தமிழ்நாடு அணி தனது முதல் இன்னிங்ஸில் 96 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தமிழ்நாடு அணி தரப்பில் அஸ்வின் 24 ரன்களைச் சேர்த்தார். இமாச்சலப் பிரதேச அணியில் வைபவ் அரோரா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இமாச்சல் அணிக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.

ஏனெனில், தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் அந்த அணி சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் ரிஷி தவான் 27 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

தமிழ்நாடு அணி சார்பில் நடராஜன், அஸ்வின், சாய் கிஷோர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். ஹிமாச்சல் அணி 195 ரன்கள் முன்னிலையுடன் இன்று தனது மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கவுள்ளது.

இதையும் படிங்க:ஐஎஸ்எல் கால்பந்து: மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூரு எஃப்.சி

ABOUT THE AUTHOR

...view details