தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டூ பிளசிஸ் கூறிய பதிலால்... மைதானத்தில் சிரிப்பலை! - ஃபாப் டூ பிளேசிஸ் தலைமையிலான பார்ல் ராக்ஸ் அணி

ஜோகன்னஸ்பர்க்: மான்சி சூப்பர் லீக் டி20 தொடரின் 28ஆவது லீக் ஆட்டத்தில் டாஸ் போடப்பட்ட சமயத்தில் பார்ல் ராக்ஸ் அணியின் கேப்டன் டூ பிளசிஸ் வர்ணனையாளரின் கேள்விக்கு அளித்த பதில் அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.

faf du plessis
faf du plessis

By

Published : Dec 9, 2019, 10:46 AM IST

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும், மான்சி சூப்பர் லீக் டி20 தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் டூ பிளசிஸ் தலைமையிலான பார்ல் ராக்ஸ் அணியும், ஸ்மட்ஸ் தலைமையிலான ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.

இதில், முதலில் டாஸ் வென்ற ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போது அணியில் மாற்றங்கள் குறித்து வர்ணனையாளர் இரு அணி கேப்டன்களிடமும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த டூ பிளசிஸ், 'இன்றைய போட்டியில் எங்கள் அணியின் வில்ஜோன் பங்கேற்கமாட்டார். அவருக்கும் எனது தங்கைக்கும் நேற்றுதான் திருமணம் முடிந்தது. இதனால் அவர் நிச்சயம் வேறு வேலையில் பிசியாக இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் வில்ஜோன்பங்கேற்க இயலாது' என உண்மையைக் கூறினார்.

டூ பிளசிஸ்ஸின் இந்த பதிலைக் கேட்ட வர்ணனையாளரும்,ரசிகர்களும் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்தனர்.

டூ பிளசிஸ்ஸின் தங்கை ரெமி ரைனர்ஸ், வில்ஜோன் ஆகியோர் கடந்த ஓராண்டாக ’டேட்டிங்’ செய்துவந்த நிலையில் அவர்களின் திருமணம் தற்போது நடைபெற்றுள்ளது.

எது எப்படி இருந்தாலும் இந்த ஆட்டத்தில் டூ பிளசிஸ் தலைமையிலான பார்ல் ராக்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பயிற்சியின்போது சாம்சனை உற்சாகப்படுத்திய சொந்த ஊர் ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details