உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்ததிலிருந்து இந்திய வீரர் தோனி இதுவரை இந்திய அணிக்காக ஒரு போட்டியிலும் விளையாடாமல் இருக்கிறார். இவர் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவாரா அல்லது ஓய்வு பெறுவாரா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில், 125 நாட்களுக்குப் பிறகு அவர் ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் பேட்டிங் வலைப்பயிற்சியில் மேற்கொண்ட வீடியோ இணையதளத்தில் வைரலானது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் டி20 தொடரில் தோனி இந்திய அணியில் ரிஎன்ட்ரி தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.