கடந்த மாதம் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் மாரடைப்பு காரணமாக டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வழங்கப்பட்டது. இதையடுத்து சில புகைப்படங்கள் வெளியிட்ட கபில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஆச்சரியமளிக்கும்விதமாக காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தக் காணொலியில், ''அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். இந்த ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியை கொண்டுவரும். உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி. நான் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். இதயம் நன்றாக உள்ளது. ஆனால் நான் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் கூற விரும்புகிறேன்.