2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றிபெற்று, 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக்கோப்பையைக் கைப்பற்றியது.
2011 உலகக்கோப்பை விவகாரம் - என்ன சொல்கிறார் சங்ககரா! - சங்கக்காரா
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் வெற்றி ஃபிக்ஸ் செய்யப்பட்டதாக இலங்கை முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவின் குற்றச்சாட்டிற்கு முன்னாள் கேப்டன் சங்ககாரா பதிலளித்துள்ளார்.
இந்த ஆட்டம் நடப்பதற்கு முன்னதாகவே இந்திய அணிக்குச் சாதகமாக மேட்ச் ஃபிக்ஸிங் செய்யப்பட்டதாக இலங்கை முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து அவர் பேசுகையில், ''நான் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோது உலகக்கோப்பை தொடர் நடந்தது. அதில் இலங்கை அணி வென்றிருக்க வேண்டும். ஆனால், ஃபிக்ஸிங் செய்யப்பட்டதால் இலங்கை அணி தோல்வியடைந்தது. இதனைப் பற்றிய விவாதத்திற்கு நான் தயாராகவே இருக்கிறேன். கிரிக்கெட் வீரர்கள் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை'' என்றார்.
இதனால் கிரிக்கெட் ரசிகர்களிடையே சர்ச்சை எழுந்தது. தற்போது இந்தச் சர்ச்சைக்கு இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்ககாரா பதிலளித்துள்ளார். அதில், ''இலங்கை முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவிடம் இருக்கும் ஆதாரங்களை ஐசிசியிடமும், ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் இந்தக் குற்றச்சாட்டு பற்றி முழுமையாக விசாரிக்க முடியும்'' என்றார். சங்ககாராவின் இந்தக் கருத்துக்கு ஜெயவர்தனே ஆதரவளித்துள்ளார்.