தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கம்பீரின் கருத்து குறித்து, எனக்கு எந்த கருத்தும் இல்லை : கங்குலி மவுனம்!

டெல்லி : புல்வாமா தாக்குதலுக்கு குறித்த கம்பீரின் கருத்துக்கு நான் எவ்வித பதிலும் அளிக்க விரும்பவில்லை என இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி

By

Published : Mar 19, 2019, 10:09 PM IST

புல்வாமா தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் உடன் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க கூடாது என இந்திய முன்னாள் வீரர் கம்பீர் கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து கங்குலியிடம் கேட்டதற்கு, கம்பீரின் கருத்து பற்றி எனக்கு எந்த கருத்தும் இல்லை. அது அவருடைய சொந்த கருத்து எனக் கூறினார்.

மேலும், உலகக்கோப்பையை இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புகள் நிச்சயம் அதிகம் உள்ளது. கேதார் ஜாதவ் 6-வது இடத்தில் களமிறங்கினால் சிறப்பாக இருக்கும். விராட் கோலி மிகச்சிறந்த வீரர். எந்த இடத்தில் களமிறங்கினாலும் விராட் சிறப்பாகவே ஆடுவார். ஆனால், அவருக்கு மூன்றாம் இடம் தான் சரியானதாக இருக்கும். இந்திய அணிக்கு பலவீனம் என்று எதுவும் இல்லாததால், உலகக்கோப்பையை கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details