தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

எதிர்காலத்தில் ரிசர்வ் டே இருந்தால் நல்லது - ஹர்மன்ப்ரீத் கவுர்! - Harmanpreet

ஐசிசி தொடர்களின் முக்கிய போட்டிகளுக்கு ரிசர்வ் நாள்கள் இருந்தால் நல்லது என இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

harmanpreet-sympathises-with-england-says-having-reserve-days-in-future-will-be-great
harmanpreet-sympathises-with-england-says-having-reserve-days-in-future-will-be-great

By

Published : Mar 5, 2020, 3:51 PM IST

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மகளிர் டி20 அரையிறுதிப் போட்டி டாஸ் போடாமலேயே ரத்து செய்யப்பட்டது. இதனால் குரூப் பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதுகுறித்து இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேசுகையில், '' இன்றைய போட்டி ரத்து செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது. இருந்தாலும் முடிவினை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். முக்கிய போட்டிகளுக்கு ரிசர்வ் நாள்கள் இருந்தால் நல்லது.

இந்தத் தொடரின் முதல் போட்டியிலிருந்தே அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும் என நினைத்தோம். ஏனென்றால் அரையிறுதிப் போட்டிகள் நடக்கவில்லை என்றால் அதனை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருந்திருக்கும்.

தென் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய அணிகளில் வெற்றிபெறுவோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள். யார்ப் வருகிறார்கள் என்பது பற்றி கவலையில்லை. நாங்கள் எங்களது ஆட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம்'' என்றார்.

இதையும் படிங்க: தேர்வுக் குழுவினருக்கான நேர்காணலில் தோனியின் எதிர்காலம் குறித்த கேள்வி

ABOUT THE AUTHOR

...view details