இந்திய மகளிர் டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு முன்னதாக லேசான கரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில், தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மார்ச் 17ஆம் தேதி நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகிய அவர், தொடர்ந்து நடைபெற்ற டி20 தொடரிலும் பங்கேற்கவில்லை. அதனைத் தொடர்ந்து நேற்று (மார்ச்.29) அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது.
இந்நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுருக்கு தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஹர்மன்ப்ரீத் கவுர் அரை சதம், 40 ரன்கள் எனக் குவித்து நிலையான ஃபார்மில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: ஹர்மன்ப்ரீத் கவுர் கடந்து வந்த பாதை!