இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக வலம்வந்தவர் ஹர்திக் பாண்டியா. இவர் கடந்தாண்டு நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான போட்டியின்போது தனது முதுக்குப்பகுதியில் காயமடைந்தார். இதனையடுத்து காயம் காரணமாக லண்டனில் அறுவைசிகிச்சை மேற்கொண்ட பாண்டியா கடந்த ஐந்து மாதங்களாக ஓய்விலிருந்து வந்தார்.
இதனையடுத்து பூரண உடல்நலமடைந்த பாண்டியா நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்காக தேர்வுசெய்யப்பட்டிருந்தார். மேலும் இவர் இந்தப் போட்டிக்காகத் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டுவந்திருந்தார்.
இதனையடுத்து தற்போது என்.சி.ஏ. (தேசிய கிரிக்கெட் அகாதமி) பாண்டியா தனது முழு உடல் தகுதியுடன் இருக்கிறார என்ற சோதனைக்கு அழைந்திருந்தது. இதனையடுத்து இச்சோதனையில் பங்கேற்ற பாண்டியா தோல்வியடைந்துள்ளதாகத் தெரிகிறது.