இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருபவர் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவர் தோனிக்கு பிறகு இந்திய அணியின் சரியான ஃபினிஷர் என்ற பெருமைக்கு சொந்தகாரராவார். ஏற்கனவே உலகக்கோப்பை தொடருக்கு பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இவருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது.
அதன்பிறகு இவர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால் தற்போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ள ஹர்திக், இன்னும் ஐந்து மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.