இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்றுப் போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர், வருகிற டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி, சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்தப் பட்டியலில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான மீண்டும் ரிஷப் பந்த் மட்டுமே நீடித்தார். ஆனால், கடந்த வங்கதேச அணிக்கு எதிராக அவர் சிறப்பாக செயல்படாத காரணத்தால், அவருக்குப் பதிலாக சன்சு சாம்சன் இடம்பெறுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அதற்கு மாறாக மீண்டும் ரிஷப்பிற்கே வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், ' சன்சு சாம்சனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு இந்திய அணியில் வழங்கப்படாததால், நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். மேலும் இவருக்கு வங்க தேச அணியுடான டி20 தொடரிலும் ஒரு வாய்ப்பு கூட வழங்கவில்லை. தேர்வுக் குழு சன்சு சாம்சனின் பேட்டிங்கைச் சோதனை செய்கிறார்களா.. இல்லை அவரது இதயத்தை சோதனை செய்கிறார்களா.. என்று எனக்குப் புரியவில்லை' எனப் பதிவிட்டிருந்தார்.