தமிழ்நாடு

tamil nadu

அண்ணே... என் பேட்ட காணோம்ணே! இது என்னடா தமிழ் புலவருக்கு வந்த சோதனை!

By

Published : Mar 8, 2020, 8:35 PM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹர்பஜன் சிங், விமனத்திலிருந்த தனது பேட்டை காணவில்லை என ட்விட்டரில் புகாரளித்துள்ள சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

harbhajan-singhs-bat-stolen-from-flight
harbhajan-singhs-bat-stolen-from-flight

இந்தியாவில் இம்மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் இம்மாத தொடக்கத்திலேயே சென்னைக்கு வந்து தங்களது பயிற்சிகளை தொடர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை அணியின் நட்சத்திர வீரரான ஹர்பஜன் சிங்கும் தனது பயிற்சிக்காக நேற்று மும்பையிலிருந்து, இண்டிகோ விமானத்தில் கோவைக்கு வந்துள்ளார். அப்போது தனது உடமைகளை சரிபார்த்துக் கொண்டிருந்த அவருக்கு பேரதிர்ச்சியாக, தனது கிட் பேக்கிலிருந்த பேட் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், நான் நேற்று மும்பையிலிருந்து கோவைக்கு இண்டிகோ நிறுவனத்தின் விமானம் மூலம் வந்தேன். பின் எனது பையை நான் சோதனை செய்த போது அதிலிருந்த பேட் காணாமல் போகியுள்ளது. எனது பேட்டை திருடியவரை கண்டுபிடித்து அவருக்கு கடுமையான தண்டனை வழங்கும்படி மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினரிடமும், இண்டிகோ நிறுவனத்திடமும் உதவி கேட்டிருந்தார்.

இதற்கு இண்டிகோ நிறுவனமும், இதுபோன்று நடந்ததற்கு எங்களை மன்னித்துவிடுங்கள் மிஸ்டர் சிங். நாங்கள் உடனடியாக அது என்னவென்று விசாரித்து தகவல் தெரிவிக்கிறோம் எனத் தெரிவித்திருந்தது.

ஆனால் ஹர்பஜன் மீண்டும் தனது ட்விட்டரில், என் கிட்பேக்கில் இருந்து பேட் காணாமல் போனது பற்றி உங்களிடமிருந்து இதுவரை எந்த தகவலும் எனக்கு வரவில்லை என்றும், நீங்கள் இதனை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லையா என்ன?? என்று இண்டிகோ நிறுவனத்திடம் கோள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இதேபோன்று சில மாதங்களுக்கு முன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹ்மத், இண்டிகோ நிறுவன விமானத்திலிருந்து தனது கிட் பேக்கை யாரோ திருவிட்டார்கள் என புகாரளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கெத்து காட்டிய ஆஸி., சரணடைந்த இந்தியா... #PhotoStory

ABOUT THE AUTHOR

...view details