தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சுஜித் உயிரிழப்பு ''மீள முடியா துயரம்''  - ஹர்பஜன்! - harbhjajan tweet about sujith

நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கமுடியாமல், உயிரிழந்த சம்பவம் மீள முடியா துயரம் என கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார்.

harbhajan-singh-tweet-for-sujith

By

Published : Oct 29, 2019, 7:34 PM IST

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஆடியதிலிருந்து தமிழ்நாட்டின் முக்கிய சம்பவங்கள் குறித்து தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில்,நேற்று இரவு சுஜித் உயிரிழந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தை சுஜித் உயிரிழந்தது குறித்து பதிவிட்டுள்ளார். அதில்,

''மீள முடியா துயரம்!
என்னால எதும் செய்ய முடியல அப்பிடின்னு நெனச்சு அழுக வருது.போனது ஒரு உயிர் மட்டுமில்ல நம்ம ஒட்டுமொத்தப் பேரோட தன்னம்பிக்கை.இனியொரு உயிர் இந்த மாதிரி போகக் கூடாது.அவங்க அம்மா அப்பாக்கு யார் ஆறுதல் சொல்லுவாங்க.என் மனதில் என்றும் நீ நிற்பாய் மகனே #Sujith #RIPSujith'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிறுவனை பலியிட்ட தாய்மாமன்! - குழந்தை வரம்வேண்டி நடந்த கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details