கரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துவருகிறது. இதனிடையே நேற்று இரவு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார். இதனை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த வரையில் செயல்பட்டு வருகின்றனர்.
கரோனா :ஹர்பஜன் சிங்கின் குட்டி ஸ்டோரி...! - PM Modi Speech
கரோனா வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ள குட்டி ஸ்டோரி பதிவு ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ”பிரதமர் மோடியின் வார்த்தைகளை சரியாக பின்பிற்றுவோம். தடைகளை உடைத்து உலகக் கோப்பை, ஆஸ்கர் விருது போன்றவற்றைக் கைபற்றிய நமக்கு, கண்ணுக்கு தெரியாத கரோனா என்ற சவால் ஏற்பட்டுள்ளது. இந்த 21 நாள்கள் வீட்டைவிட்டு வெளிவராமல் கரோனாவை எதிர்கொண்டு சர்வதேச நாடுகளுக்கு முன்மாதிரியாய் இருப்போம்” என பதிவிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் ஆகியோரையும் Tag செய்துள்ளார்.
இதையும் படிங்க:கொல்கத்தாவை இப்படி பார்ப்பேன் என நினைக்கவில்லை - வருந்தும் தாதா!