இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரராகவும், சுழற்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். இவர், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அந்த சீசனின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்த ஹர்பஜன் சிங், தமிழ் மொழியின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக, ஒவ்வொரு போட்டியின் போதும் தமிழில் ட்வீட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இதன் காரணமாக, ரசிகர்கள் ‘தமிழ் புலவர்’ என்ற புனைப்பெயரையும் ஹர்பஜன் சிங்கிற்கு சூட்டினர். இந்நிலையில் 2020ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனில், தனிப்பட்ட காரணங்களால் ஹர்பஜன் சிங் விலகினார். அந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடர் வரலாற்றில் முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல், லீக் போட்டிகளோடு தொடரிலிருந்து விலகியது.