இஸ்ரோவின் கனவுத் திட்டமான சந்திரயான்-2 திட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.
‘கொடியில் நிலா இல்லை... நிலாவில்தான் கொடி உள்ளது’ - ஹர்பஜன் சிங் நக்கல் ட்வீட் - இஸ்ரோ
சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட்டதற்கு, இந்திய வீரர் ஹர்பஜன் சிங் பாகிஸ்தானை கிண்டல் செய்யும் விதமாக ட்வீட் செய்துள்ளார்.
இதற்கு, அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் பலரும் இஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இஸ்ரோவின் வெற்றியை மையாக வைத்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் பாகிஸ்தானை கிண்டல் செய்யும் விதமாக ட்வீட் செய்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், சில நாடுகளின் தேசியக் கொடிகளில் நிலா சின்னமாக இடம்பெற்று இருக்கும். ஆனால், ஒரு சில நாடுகள்தான் நிலவில் தங்களது தேசியக் கொடிகளை நாட்டியுள்ளது. அதில், இந்தியாவும் ஒன்று என குறிப்பிட்டுள்ளார். தற்போது, இவரது பதிவு இணையதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.