தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஜான்டி ரோட்ஸ், தனது குடும்பத்தாருடன் இந்தியாவில் சுற்றுலா மேற்கொண்டுள்ளார். இந்தச் சுற்றுப்பயணத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களையும் ஜான்டி தனது சமூகவலைதள கணக்குகளில் பதிவிட்டுவருகிறார். இதனிடையே ரிஷிகேஷிற்கு சென்ற அவர் அங்குள்ள கங்கை நதியில் நீராடினார். தொடர்ந்து அந்தப் புகைப்படத்தை அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
கங்கையில் குளித்த தென் ஆப்பிரிக்க வீரர்... கலாய்த்த ஹர்பஜன் சிங் - கங்கையில் குளித்த தென் ஆப்பிரிக்க வீரர்
தென் ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் பதிவிட்ட புகைப்படத்தை கலாய்த்து, இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் ட்விட்டரில் கருத்து பதிவிட்டார்.
jonty rhodes
இதைக் கண்ட இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், ”என்னைவிட நீங்கள்தான் அதிகமாக இந்தியாவில் இருக்கிறீர்கள். நீங்கள் கங்கையில் புனித நீராடி மகிழ்ச்சியாக இருப்பது நன்றாக உள்ளது. அடுத்த முறை போகும்போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள்” எனப் பதிவிட்டார்.