தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கங்குலியை டான்ஸ் ஆடவைத்த ஹர்பஜன்! - ஹர்பஜன்

டெல்லி: தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பிசிசிஐ தலைவர் கங்குலியை இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங் டான்ஸ் ஆடவைத்த சம்பவம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

harbhajan-makes-ganguly-dance-to-bollywood-tune
harbhajan-makes-ganguly-dance-to-bollywood-tune

By

Published : Jan 13, 2020, 10:11 PM IST

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான கங்குலி, ஹர்பஜன், சேவாக், முகமது கைஃப், விவிஎஸ் லக்‌ஷ்மன், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகி உஷா உதுப் கலந்துகொண்டு பாலிவுட் படமான 'ஜிந்தகி நா மில்லேகி தோபாரா’ படத்தின் 'செனோரிட்டா' பாடலைப் பாடினார். இதனால் உற்சாகமடைந்த ஹர்பஜன் சிங் நடனமாடத் தொடங்கினார்.

மேமலும் அருகில் நின்றிருந்த கங்குலியையும் உடன் சேர்த்து நடனமாட வைத்தார். இது அந்த அரங்கில் அமர்ந்திருந்த அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. தற்போது கங்குலி நடனமாடிய இந்த வீடியோ ரசிகர்களிடையே சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: எந்த இடமாக இருந்தாலும் சரி; டிம் பெய்ன் சவாலை ஏற்ற விராட் கோலி!

ABOUT THE AUTHOR

...view details