மக்களவைத் தொகுதியின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு மே.12ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில் டெல்லி மாநில மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் முக்கிய கட்சிகள் முழுமூச்சுடன் பரபரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அதில் டெல்லி கிழக்கு தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷியின் சாதி குறித்து தரக்குறைவாக பேசியதாக டெல்லி கிழக்கு தொகுதி பாஜக வேட்பாளர் கம்பீர் மீது ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அரசியலில் கம்பீருக்கு ஆதரவாக களமிறங்கிய ஹர்பஜன்! - BJP gambhir
டெல்லி கிழக்கு மக்களவைத் தொகுதியின் ஆம் ஆத்மி பெண் வேட்பாளர் அதிஷியை சாதியை வைத்து தரக்குறைவாக பேசியதாக பாஜக வேட்பாளர் கம்பீர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக அவருக்கு ஹர்பஜன் ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.
அரசியலில்
இந்த குற்றச்சட்டுக்கு கவுதம் கம்பீர் மறுப்பு தெரிவித்தோடு மட்டுமல்லாமல் , குற்றம் நிரூபிக்கப்பட்டால் எனது வேட்புமனுவை உடனடியாக வாபஸ் வாங்குவதாக கூறி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கம்பீர் சவால் விடுத்துள்ளார்.