தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

‘மாஸ்டர் பிளாஸ்டர் 47’ வாழ்த்து கூறிய பிரபலங்கள்! - தமிழ் விளையாட்டு செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு மத்தியில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

Happy Birthday Sachin Tendulkar: Wishes pour in for the Master Blaster on his 47th b'day
Happy Birthday Sachin Tendulkar: Wishes pour in for the Master Blaster on his 47th b'day

By

Published : Apr 24, 2020, 10:18 PM IST

Updated : Apr 25, 2020, 11:15 AM IST

கோவிட்-19 பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இம்மாதம் 15ஆம் தேதி, தொடங்குவதாக இருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

‘கிரிக்கெட்டின் கடவுள்’, ‘லிட்டில் மாஸ்டர்’, ‘மாஸ்டர் பிளாஸ்டர்’, என்றெல்லாம் உலக கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 47ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் சச்சினின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள் குறித்த சிறுதொகுப்பு இதோ...

  • இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பதிவில், கிரிக்கெட் விளையாட்டின் மீது பேரன்பு கொண்ட மனிதருக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், இந்த வருடம் உங்களுக்கு சிறப்பாக அமையவும் என்னுடைய வாழ்த்துகள் பாஜி என்று பதிவிட்டுள்ளார்.
  • பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில், பிறந்தநாள் வாழ்த்துகள் சச்சின். கிரிக்கெட் வரலாற்றின் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். உங்களுடன் இணைந்தும், உங்களுக்கு எதிராகவும் விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
  • இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பதிவில், இந்திய அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். தற்போதுள்ள இளைஞர்களின் மிகப்பெரும் வழிகாட்டி சச்சின் மட்டுமே. ஒவ்வொரு தோல்விக்கு பிறகும் வெற்றி வரும் என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்துகொள்ள வேண்டிய விஷயம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சச்சின் டெண்டுல்கர் என்று பதிவிட்டுள்ளார்.
  • ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ தனது ட்விட்டர் பதிவில், பிறந்தநாள் வாழ்த்துகள் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் நாம் எவ்வளவு தான் மோதினால், நம் நட்பானது என்றும் மாறாது. பத்திரமாக உங்களது பிறந்தநாளை கொண்டாடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
  • இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ் தனது ட்விட்டர் பதிவில், சச்சின் டெண்டுல்கருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழத்துகள். கிரிக்கெட்டை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது மட்டுமல்லாமல், இவர் மிகச்சிறந்த மனிதராகவும் இருந்து வருகிறார் என்று பதிவிட்டுள்ளார்.
  • இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது ட்விட்டர் பக்கத்தில், பிறந்தநாள் வாழ்த்துகள் பாஸ்மேன். இந்த விளையாட்டில் நீ விட்டு சென்ற எந்த மரபும் மாறாது. கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
  • இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில், பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சச்சின் டெண்டுல்கர் சார். இதே போன்று எப்போதும் நாட்டு மக்களை ஊக்கப்படுத்திக்கொண்டே இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
  • இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ்ப்ரிட் பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட் களத்தில் ஒரு உண்மையான உத்வேகத்திற்கு அடையாளம் நீங்கள். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சச்சின் சார். இந்தநாள் இனிய நாளாக அமையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
  • ஆப்கான் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் தனது ட்விட்டர் பதிவில், நீங்கள் எங்கள் அனைவருக்கும் ஒரு உத்வேகம். வரவிருக்கும் ஆண்டில் நீங்கள் மகிழ்ச்சியையும், வெற்றியையும் சந்திக்க என்னுடைய வாழ்த்துகள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சச்சின் சார் என்று பதிவிட்டுள்ளார்.
  • இதேபோல் இந்திய அணி வீரர்கள், சர்வதேச வீரர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ஐபிஎல் அணிகள் என பல்வேறு துறையினரும் சச்சின் டெண்டுல்காருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:தலைவன் ஒருவனே: சச்சின்... சச்சின்...!

Last Updated : Apr 25, 2020, 11:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details