இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒரு வீடியோவில் தனது தொடக்க கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அந்த வீடியோவில், ’என்னுடைய தொடக்க காலத்தில் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக ஆட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அணி நிர்வாகம் எனக்கு அந்த வாய்ப்பளிக்கவில்லை. தொடக்க வீரராக களமிறங்குவதற்கு பல முறை கெஞ்சியுள்ளேன்.
அப்போது தொடக்க வீரராக களமிறங்குபவர்கள் அனைவரும் விக்கெட்டுகளை காப்பாற்றுவதிலேயே கவனம் செலுத்துவர். ஆனால் எனக்கோ பந்துவீச்சாளர்களை எதிர்த்து அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட வேண்டும் எனத் தோன்றும். ஆனால் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அந்த வாய்ப்புக்காக பலமுறை கெஞ்சி, தொடக்க வீரராக நான் சோபிக்கவில்லை என்றால் மீண்டும் உங்கள் முன் வந்து வாய்ப்புக்காக வரமாட்டேன் எனத் தெரிவித்த பின்தான் எனக்கு தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டது.