இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில் உள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.
இது தொடர்பாக ரெய்னா சமீபத்தில் ஜம்மு-காஷ்மீர் முதன்மை செயலாளர் நிதீஷ்வர் குமார், லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா ஆகியோரை நேரில் சந்தித்து உரையாடியிருந்தார்.
இந்நிலையில் சுரேஷ் ரெய்னா இன்று (அக்.29) மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவை நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது விளையாட்டுப் போட்டிகளை மேம்படுத்துவது குறித்தும், ஜம்மூ - காஷ்மீரில் விளையாட்டு போட்டிகளை நடத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது.