விஜய் ஹசாரே ஒருநாள் உள்ளூர் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பெங்களூருவில் இன்று நடைபெற்றுவரும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு - குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. மைதானத்தில் ஈரப்பதம் அதிகம் இருந்ததால், இப்போட்டி 40 ஓவர்களாகக் குறைக்கப்பட்டன.
#VijayHazare: தமிழ்நாடு பந்துவீச்சில் தடுமாறிய குஜராத் - தமிழ்நாடு - குஜராத்
விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதிப் போட்டியில் குஜராத் அணி தமிழ்நாடு அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 177 ரன்களை மட்டுமே எடுத்தது.
இப்போட்டியில், டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே தமிழ்நாடு அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், அந்த அணி 40 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை எடுத்தது.
குஜராத் அணியில் அதிகபட்சமாக துருவ் ராவல் 40, அக்ஸர் படேல் 37 ரன்கள் அடித்தனர். தமிழ்நாடு அணி தரப்பில் எம். முகமது மூன்று, வாஷிங்டன் சுந்தர், நடராஜன், அஸ்வின், முருகன் அஸ்வின், பாபா அபராஜித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அணி 178 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்யவுள்ளது.