தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பொல்லார்டை மீண்டும் சீண்டிய சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளை - பிராவோ

குளோபல் டி20 கிரிக்கெட் தொடரில் பொல்லார்ட்டை அவுட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பொல்லார்டை மீண்டும் சீண்டிய சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளை

By

Published : Jul 30, 2019, 5:29 PM IST

டி20 கிரிக்கெட்டின் சிறந்த ஆல்ரவுண்டர்களாக பிராவோ, பொல்லார்ட் இருவரும் ஜொலித்துவருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த இருவரும் டாம் அண்ட் ஜெர்ரியை போன்று களத்தில் எப்போதும் ஜாலியாக சண்டைப் போட்டுக்கொள்ளும் நண்பர்களாக இருக்கின்றனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக பொல்லார்டும், சென்னை அணிக்காக பிராவோவும் விளையாடிவருகின்றனர்.

இந்நிலையில், குளோபல் டி20 கிரிக்கெட் தொடர் கனடாவில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடந்த போட்டியில் வின்னிபேக் ஹாக்ஸ் அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டொரன்டோ நேஷனல்ஸ் அணியை வீழ்த்தியது.

இப்போட்டியில், டொரன்டோ நேஷனல்ஸ் அணிக்காக விளையாடிய பொல்லார்ட் 21 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், ஐந்து சிக்சர் என 52 ரன்களில் பிராவோவின் ஸ்லோயர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பொல்லார்ட்டின் இந்த விக்கெட்டை கொண்டாடும் விதமாக, பிராவோ அவர் கண் எதிரில் நடனம் ஆடி அவரை வெறுப்பேற்றினார்.

பிராவோ - பொல்லார்ட்

இதைக்கண்ட பொல்லார்ட் தனது பேட்டால் பிராவோவின் வயற்றில் லேசாக தட்டிவிட்டு பெவிலியன் திரும்பினார். டாம் அண்ட் ஜெர்ரியை போல் மீண்டும் இவ்விரு வீரர்களும் செல்லமாக சண்டையிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details