பொதுவாக, கிரிக்கெட் போட்டியில் பந்துவீச்சாளர்கள், விக்கெட்டுகளை எடுத்ததை வித்தியாசமான முறையில் கொண்டாடுவார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் சல்யூட் அடிப்பதும், தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் மைதானத்தில் பராசக்தி எக்ஸ்பிரஸ் ஒட்டுவார். தற்போது யாரும் எதிர்பாராத வகையில், ஒரு ஸ்பின்னர் விக்கெட் எடுத்தப் பிறகு மைதானத்தில் மேஜிக் செய்கிறார்.
தென் ஆப்பிரிக்காவில் மான்சி சூப்பர் லீக் டி20 தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற போட்டியில் பார்ல் ராக்ஸ் - டர்பன் ஹீட் அணிகள் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராக்ஸ் அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, கமரோன் டெல்போர்ட் 84, டூப்ளஸிஸ் 66 ரன்கள் அடித்தனர்.
இதைத்தொடர்ந்து, 196 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய டர்பன் ஹீட் அணி அலெக்ஸ் ஹெல்ஸ் அணியின் அதிரடியில் 18.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அலெக்ஸ் ஹெல்ஸ் 55 பந்துகளில் ஒன்பது பவுண்டரி, நான்கு சிக்சர் உட்பட 97 ரன்களுடன் ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்தனர்.
இதனால், டர்பன் ஹீட் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனிடையே, பார்ல் ராக்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஷாம்சியின் பந்துவீச்சில் டர்பன் வீரர் விஹான் லுபே வில்ஜோயினிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை கொண்டாடும் விதமாக, ஷாம்சி களத்தில் தனது கையிலிருந்த கைக்குட்டையை, குச்சியாக மாற்றி மேஜிக் செய்தார். இந்த விடியோ தற்போது சமூகவலைதளங்களில் உலாவந்துகொண்டிருக்கிறது.
இதையும் படிங்க:துள்ளிக் குதிக்கும் பொம்மைக் குதிரை - ஐரோப்பாவில் பிரபலமாகும் ஹாப்பி-ஹார்ஸ் போட்டி