தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித். மிக இளம் வயதிலேயே கேப்டன் பொறுப்பேற்ற ஸ்மித், இதுவரை 117 டெஸ்ட் போட்டிகளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரத்து 989 ரன்களை குவித்துள்ள ஸ்மித் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2014ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
இதனிடையே ஸ்மித் கடந்த இரண்டாம் தேதி தனது நீண்ட நாள் காதலியான ரோமி லான்பிரான்சி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் காதலித்து வரும் ஸ்மித் - ரோமி ஆகியோருக்கு 2016ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
முன்னதாக ஸ்மித்திற்கு மார்கன் டீன் என்ற அயர்லாந்து பாடகியுடன் திருமணம் நடைபெற்று, அவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஸ்மித், தன் முதல் மனைவி மார்கனை 2011ஆம் ஆண்டு விவகாரத்து செய்தார்.