தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம்வந்தவர் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித். இவர் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக 2003ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை நீடித்தார். அதன்பின் கடந்த 2014ஆம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார்.
தனது ஓய்விற்கு பிறகு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பாக தொலைக்காட்சி வர்ணனையாளராக பணியாற்றி வந்த ஸ்மித் தற்போது, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் செயல் இயக்குநராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நான் பலமுறை தென் ஆப்பிரிக்க அணியின் ஆலோசகராக பணியாற்றியுள்ளேன். ஆனால் தற்போது செயல் இயக்கநர் என்ற புதிய பதவியில் நான் நியமிக்கப்பட்டுள்ளது எனக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ ஜாக் பால் கூறுகையில், கிரேம் ஸ்மித் இந்த பதவியை ஏற்றுகொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் இவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர்வரை இந்த பதவியில் நீடிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:10 ஆண்டுகளுக்குப் பிறகு பழைய பாட்ஷாவாக மாறிய பாகிஸ்தான்!