தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'மீண்டு வா நண்பா'- சச்சினை வாழ்த்திய விவியன் ரிச்சர்ட்ஸ்! - கரோனா

கோவிட் 19 பெருந்தொற்று பாதிப்பிலிருந்து சச்சின் டெண்டுல்கர் விரைந்து மீள, முன்னாள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் வாழ்த்தியுள்ளார்.

Vivian Richards Sachin Tendulkar Team India road saftey world series சச்சின் தெண்டுல்கர் கோவிட் கரோனா விவியன் ரிச்சர்ட்ஸ்
Vivian Richards Sachin Tendulkar Team India road saftey world series சச்சின் தெண்டுல்கர் கோவிட் கரோனா விவியன் ரிச்சர்ட்ஸ்

By

Published : Mar 28, 2021, 3:04 PM IST

டெல்லி: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தாம் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சனிக்கிழமை (மார்ச் 27) அறிவித்தார்.

கரோனா பாதிப்பிலிருந்து சச்சின் டெண்டுல்கர் விரைந்து மீள வேண்டி, மேற்கிந்திய தீவுகள் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் ட்விட்டரில், “என் சச்சின் விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன். விரைந்து குணமடையுங்கள் சச்சின் டெண்டுல்கர். உலகெங்கிலும் லட்சக்கணக்கான மக்கள் உங்களுக்காக பிரார்த்திக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் தாம் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சனிக்கிழமை (மார்ச் 27) அறிவித்திருந்தார். அப்போது, “மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டேன் என்று அறிவித்திருந்த சச்சின், தனது குடும்பத்தினர் கரோனாவால் பாதிக்கப்படவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

சச்சின் அண்மையில் சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரில் ஆடினார். 2011 உலக கோப்பையை வென்றது, 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 200 ரன்கள் குவித்தது என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின் தெண்டுல்கர்.

இதையும் படிங்க: சச்சின் டெண்டுல்கருக்கு கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details