குளோபல் டி20 போட்டியின் 8ஆவது லீக் போட்டியில் கிரிஸ் கெய்ல் தலைமையிலான வாங்கூவர் நைட்ஸ் அணியும், ஜார்ஜ் பெய்லீ தலைமையிலான மாண்ட்ரீல் டைகர்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற டைகர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
குளோபல் டி20: ’கெய்ல் ஸ்ட்ரோம் இஸ் பேக்’ - target
ஒன்டாரியோ: கிரிஸ் கெய்லின் சதத்தால் வங்கூவர் நைட்ஸ் அணி 276 ரன்களை குவித்தது. ஆனால், மழைக்காரணமாக இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய நைட்ஸ் அணியின் கேப்டன் கிரிஸ் கெய்ல், எதிரணியின் பந்துவீச்சை சின்னா பின்னமாக்கினார். அவர் 47 பந்துகளில் சதமடித்து எதிரணியை மிரட்டினார். இதன் மூலம் வாங்கூவர் நைட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 276 ரன்களை குவித்தது.
சதமடித்த கிரிஸ் கெயில் 54 பந்துகளில் 7 பவுண்டரி, 12 சிக்ஸர்கள் என 122 ரன்களை எடுத்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்குவதற்கு முன் மழை பெய்ததால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.