இங்கிலாந்து நாட்டில் அடுத்த ஆண்டு புதிதாகத் தொடங்கப்படவுள்ள '100 பந்துகள்' கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் தேர்வு நேற்று நடைபெற்றது.
இத்தேர்வில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் முதல் வீரராக அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
அதே போல் டி20 கிரிக்கெட்டின் அதிரடி மன்னர்களான வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் மற்றும் இலங்கை அணியின் லசித் மலிங்க ஆகியோர் முதல் நாள் ஏலத்தில் எந்த அணிகளாலும் வாங்கப்படவில்லை.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரஸ்ஸல், ஆஸ்திரேலிய டி20 கேப்டன் அரோன் பின்ச், ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான், வெஸ்ட் இண்டீஸின் சுனில் நரைன், ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், மிட்சல் ஸ்டார்க், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் முதல் நாள் ஏலத்தில் பல்வேறு அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'தோனிக்கும் தான் வயசாயிடுச்சு அவர் விளையாடலையா?' - சர்ஃபராஸ் அகமது மனைவி கேள்வி!