இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ஸ்ரீகாந்த். 1983ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்றதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர். இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சுனில் கவாஸ்கர் பற்றி பேசியுள்ளார்.
அதில், ''சுனில் கவாஸ்கர் எப்போதும் ஜாம்பவான் தான். அந்தக் காலத்தில் எல்லோரும் அதிரடியான ஆட்டத்தை ஆட மாட்டார்கள். நான் அதிரடியான ஆட்டம் ஆடியதால் என் மீது கவனம் ஏற்பட்டது. யாரும் அப்போது அதுபோன்ற ஆட்டத்தைப் பார்த்ததில்லை. நான் டெக்னிக் பற்றி கவலைப்படாதவன். ஆனால் மறுமுனையில் சுனில் கவாஸ்கர் டெக்னிக்கலாக சிறந்த வீரர்.