கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இம்மாதம் தொடங்குவதாக இருந்த ஐபிஎல் டி20 தொடர், தற்போது காலவரையின்றி ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுனில் கவாஸ்கர் தனியார் விளையாட்டு செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில், 'இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரை இந்தியாவில் நடத்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய கவாஸ்கர், 'கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவில் ஆறு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டி20 உலகக்கோப்பைத் தொடர், அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ளதால் நெருக்கடியான சூழல் ஏற்படும்.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுனில் கவாஸ்கர் இதனால் இந்தாண்டு உலகக்கோப்பைத் தொடரை இந்தியாவும், அடுத்த உலகக்கோப்பையை ஆஸ்திரேலியாவும் நடத்திக் கொள்ளட்டும். இதைச் செய்ய முடிந்தால் இந்தாண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையை இந்தியாவும், அடுத்த ஆண்டு அக்டோபர் - நவம்பரில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலியாவும் நடத்தலாம்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கரோனா நேரத்தில் தோனியுடன் பைக் ரைடு செல்லும் ஸிவா!