கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றழைக்கப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற சச்சின், தற்போது தனது தொழில்முறை வாழ்க்கையை கவனித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர் அளித்த பேட்டி ஒன்றில், தனது கிரிக்கெட் ஹீரோக்கள் குறித்தும், நிஜ ஹீரோ குறித்தும் மனம் திறந்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சச்சின், "நான் என்னுடைய சிறுவயது முதலே கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமென விரும்பினேன். அப்போது என்னுடைய கிரிக்கெட் ஹீரோக்களாக இரண்டு பேர் இருந்தனர். ஒருவர் இந்திய அணியின் சுனில் கவாஸ்கர், மற்றோருவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விவி ரிட்சர்ட்ஸ்.
மேலும், என்னுடைய நிஜ வாழ்க்கை ஹீரோவாக இருப்பவர், என் தந்தை ரமேஷ் டெண்டுல்கர்தான். அவர் மிகவும் அமைதியான மற்றும் எளிதில் பழகக்கூடிய நபர். இதன் காரணமாகவே நான் அவருடன் அதிக நேரங்களை செலவிட்டுள்ளேன். என்னுடைய தந்தைதான் என் முதல் ஹீரோ என அனைவரிடத்திலும் கூறுவேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:பிஃபா உலகக் கோப்பை : தகுதிச் சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா, உருகுவே வெற்றி