கரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்படிருந்த ஐபிஎல் தொடர், தற்போது இந்த மாதம் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, மும்முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடர் பிரச்னை ஏதுமின்றி, சிறப்பாக நடைபெறவுள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி இன்று(செப்.09) துபாய் சென்றுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், ‘துபாயில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரைக் காண ஆறு மாதங்களுக்கு பிறகு நான் முதன் முறையாக விமானத்தில் பயணிக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் நடைபெறவுள்ளதால், இத்தொடரில் பங்கேற்கும் அணி வீரர்கள், ஊழியர்கள், உரிமையாளர்கள் என அனைவருக்கும் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:முதல் போட்டியில் மும்பை... கடைசி போட்டி பஞ்சாப்... சிஎஸ்கே அணிக்கான அட்டவணை!