தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'உலகக்கோப்பை தொடரில் தோனி யாரென்று நிரூபிப்பார்' - சவுரவ் கங்குலி - சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் ஆட்டம் குறித்து எழுந்த விமர்சனத்திற்கு , இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவ்ரவ் கங்குலி பதிலடி கொடுத்துள்ளார்.

dhoni

By

Published : Jun 27, 2019, 9:37 AM IST

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கடைசியாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை மட்டுமே எடுத்தது. எனினும் ஷமியின் சிறப்பான பந்துவீச்சு மூலம் இப்போட்டியில் இந்திய அணி 11 ரன்னில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில், தோனி - ஜாதவ் கூட்டணியின் நிதான ஆட்டம் தான் என்று முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து தோனியின் ரசிகர்கள் சச்சினை வசைபாடினர். இந்நிலையில் தோனியின் ஆட்டம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி,

'தோனி ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மேன். அவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆடியதை வைத்து நாம் அவரை கணித்துவிட முடியாது. நடப்பு உலகக்கோப்பை தொடரின் இறுதியில், தோனி தான் யார் என்பதை நிரூபித்து தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பார்' என தெரிவித்திருந்தார்.

தோனியின் ஆட்டத்தின் மீது விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இந்திய அணி இன்று வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்தப் போட்டியில் தோனி தனது ஸ்டைலான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details