இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்று எட்டு ஆண்டுகள் நிறைவடைந்தாலும், இன்றளவும் இப்போட்டியின் ஹைலைட்ஸைப் பார்த்தால் நமக்கு கூஸ்பம்ஸ் தானாகவே வரும். இந்திய ரசிகர்களை பொறுத்தவரையில், இப்போட்டி ஆல்டைம் ஃபெவரைட்டாகாத்தான் இருக்கும். இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற மிக முக்கிய காரணமே கவுதம் கம்பிர் அடித்த 97ரன்கள்தான். ஆனால், தோனியின் ஃபினிஷிங்கால் அவர் அடித்த 97 ரன்களுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்கவில்லை.
இப்போட்டியை இப்போது பார்த்தாலும் கூட, கவுதம் கம்பிர் ஏன் 97 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் இன்னும் மூன்று ரன்கள் அடித்து சதம் அடித்திருக்கலாமே என புலம்பாதவர்களே இருக்க மாட்டார்கள். தான் சதத்தை தவறவிட்டதற்கு தோனிதான் காரணம் என கவுதம் கம்பிர் காரணம் கூறியுள்ளார். அந்த நிகழ்வை குறித்து தற்போது மனம் திறந்தார்.
"நான் 97 ரன்கள் எடுத்தபோது, ஏன் அவுட் ஆனேன் என்ற கேள்வியை பலரும் என்னிடம் கேட்டனர். நான் 97 ரன்கள் எடுப்பதற்கு முன்பு, நான் இலங்கை அணி செட் செய்த டார்கெட்டை நோக்கியே என் பேட்டிங்கில் கவனம் செலுத்தினேன் எனது தனிப்பட்ட ஸ்கோரை நினைத்து பேட்டிங் செய்யவில்லை. குறிப்பிட்ட ஒரு ஓவர் முடிந்த உடன் தோனி என்னிடம், நீ சதம் விளாச இன்னும் மூன்று ரன்கள்தான் தேவை என்பதை நினைவு படுத்தினார்.
இதனால், எனது பேட்டிங் தனிப்பட்ட ஸ்கோரை நோக்கி திசைதிரும்பியது நான் 97 ரன்களில் ஆட்டமிழந்தேன். ஒருவேளை நான் எனது தனிப்பட்ட ஸ்கோரை நினைத்து பேட்டிங் செய்யாமல், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி விளையாடிருந்தால், நிச்சயம் சதம் பூர்த்தி செய்திருப்பேன்.