தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பாகிஸ்தானை கிண்டலடித்த கம்பீர் - வைரல் வீடியோவால் வெளியான உண்மை! - கேலி செய்து வீடியோ

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் பாகிஸ்தான் அரசை கேலி செய்யும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

Gautam Gambir

By

Published : Oct 1, 2019, 8:49 PM IST

கிரிக்கெட்டராக இருந்து இப்போது அரசியலில் நுழைந்திருக்கும் கவுதம் கம்பீர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இலங்கை வீரர்களுக்கு பாகிஸ்தானில் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பை கேலி செய்து வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டிக்காக கராச்சி மைதானத்திற்கு இலங்கை வீரர்கள் பாகிஸ்தானின் ராணுவ பாதுகாப்புடன் சென்ற வீடியோ அது.

பாகிஸ்தானில் ஒருவர் எடுத்த வீடியோவை பகிர்ந்த கம்பீர், " இது காஷ்மீர் இல்லை. கராச்சி என்பதை மறக்கச் செய்கிறது," என்று பதிவிட்டார். இந்த வீடியோவில் பேசும் இரு நபர்கள் "ஊரடங்கு உத்தரவு போன்ற சூழ்நிலையில்" பாகிஸ்தானில் கிரிக்கெட் எவ்வாறு விளையாடப்படுகிறது என்பதை இருவருமே விவரிக்கிறார்கள்.

தற்போது கவுதம் கம்பீர் பதிவிட்டுள்ள அந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒரே இன்னிங்ஸ் கோலி, ஜாவித் மியான்தாத் ரெக்கார்ட்ஸ் க்ளோஸ்... தெறிக்கவிட்ட பாபர் அசாம் !

ABOUT THE AUTHOR

...view details