இந்திய கிரிக்கெட் வீரராக இருந்து தற்போது கிழக்கு டெல்லி பாஜக எம்பியாக இருப்பவர் கவுதம் கம்பீர். இந்திய அணிக்காக கம்பீர் 58 டெஸ்ட், 147 ஒருநாள், 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தனது கிரிக்கெட் பயணத்தில் 10,000 ரன்களைக் குவித்துள்ள கம்பீர், கிரிக்கெட் குறித்தும் அரசியல் குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டுவருகிறார்.
குழந்தைகளின் கால்களை சுத்தம் செய்த கவுதம் கம்பீர் - கம்பிர்
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தனது பெண் குழந்தைகளின் கால்களை சுத்தம் செய்யும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
Gambhir
இந்நிலையில், இன்று அவர் தனது இரண்டு பெண் குழந்தைகளின் கால்களை சுத்தம் செய்யும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், ‘இரண்டு இளம் பெண்களின் தந்தையான நான், அவர்களின் பாதத்தை சுத்தம் செய்வதை படிப்படியாகக் கற்றுக்கொள்கிறேன். இந்த சேவைக்கான பில்-ஐ நான் யாரிடம் தர வேண்டும்?’ என்று குறிப்பிட்டு தனது மனைவி நடாஷாவை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: "நான் தான் கம்பீரின் கிரிக்கெட் பயணத்தை முடித்தேன்" - பாக். வீரர்!