இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ஆம் தேதி சிட்னியில் நடைபெறவுள்ளது. கரோனா பரவல் காரணமாக இரு அணிகளும் மெல்போர்னில் பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் புத்தாண்டு தினத்தன்று கரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி உணவகத்திற்கு சென்றதாக இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில், பிரித்வி ஷா, ரிஷப் பந்த், நவ்தீப் சைனி ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.