ஐபிஎல் தொடரின், 13ஆவதுசீசனின் இறுதி போட்டி நேற்று துபாயில் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக 2021 இல், ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவுள்ள ஐபிஎல் சீசன் குறித்து பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளது. முக்கியம்சமாக, ஐபிஎல் 2021 இல் புதிய அணி ஒன்று வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த புதிய அணி குஜராத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நிச்சயமாக இந்தியாவில் தான் நடைபெறும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, அதற்குள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மெகா ஏலத்தை நடத்திட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.