தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இது நடந்தால்தான் ஐபிஎல் உலக தரத்திற்கு முன்னேறும் - கேகேஆர் - undefined

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் சீசன் தொடர் தேதி குறிப்பிடாமல் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொல்கத்தா அணியின் நிர்வாக இயக்குநர் வெங்கி யூ ட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

ஐபிஎல் கொல்கத்தா
ஐபிஎல் கொல்கத்தா

By

Published : Jun 12, 2020, 12:18 AM IST

இதுகுறித்து அவர் பேசுகையில், '' ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் பிரதானமாக இருந்தாலும், வெளிநாட்டு வீரர்களின் பங்கு மிக முக்கியமானவர்கள். கொல்கத்தா அணியில் ரஸல், நரேன், மோர்கன், கம்மின்ஸ் ஆகியோருடன் இந்திய வீரர்கள் இணைந்து ஆடும்போது நடக்கும் மேஜிக் பெரும் பங்காற்றும்.

இதனால் இந்திய வீரர்களுடன் ஐபிஎல் தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் இணையும்போது ஐபிஎல் தொடர் உலக தரத்திற்கு முன்னேறும். எனவே ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க வேண்டு்ம. இதுவே அனைத்து அணி உரிமையாளர்களின் கருத்தாகும்.ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கொல்கத்தா அணி சார்பாக உதவி செய்துவருகிறோம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details