ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கான நாள்களை நான்காகக் குறைப்பதற்கான ஆலோசனை நடைபெற்றது. 2023ஆம் ஆண்டு நடக்கவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 4 நாள் டெஸ்ட் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது. டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்கான செலவுகள், டி20 கிரிக்கெட் போட்டிகளின் அதிகரிப்பு, பார்வையாளர்கள் இல்லாத மைதானம் என பல்வேறு காரணங்கள் இதற்காகக் கூறப்பட்டன.
இதற்கு ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் தனது கருத்தினைப் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ‘டெஸ்ட் போட்டிகளின் நாள்களைக் குறைப்பது ஐசிசியின் அபத்தமான யோசனை. அது பல்வேறு போட்டிகளை டிரா செய்வதற்கு வழிவகுப்பதோடு, சுழற்பந்து வீச்சாளர்களின் நிலையை கேள்விக்கு உட்படுத்தும். அதேபோல் டெஸ்ட் போட்டிகளில் ஐந்தாவது நாளில் ஆடும் அழகு தனித்துவம் வாய்ந்தது.