தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐசிசி தலைவர் தேர்தல் ரேஸில் குதித்த கேமரூன்

கிங்ஸ்டன்: ஐசிசி தலைவருக்கான தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் டேவ் கேமரூன் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

former-west-indies-boss-dave-cameron-joins-race-for-icc-chairmans-post
former-west-indies-boss-dave-cameron-joins-race-for-icc-chairmans-post

By

Published : Jun 29, 2020, 4:32 PM IST

ஐசிசி தலைவர் ஷாஷங்க் மனோகரின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடியவுள்ள நிலையில், அடுத்த ஐசிசியின் தலைவர் யார் என்ற கேள்வியே தற்போது அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் எழுப்பி வருகிறது.

இந்தத் தேர்தலில் ஏற்கனவே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் காலின் கிரேவ் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலியின் பெயரும் அடிபடத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேம் சார்பாக ஐசிசி தலைவருக்கு எழுதப்பட்ட கடிதத்தில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் டேவ் கேமரூனை ஐசிசி தலைவர் பதவிக்கு பரிந்துரைத்துள்ளது.

இதைப்பற்றி டேவ் கேமரூன் பேசுகையில், '' தகுதி அடிப்படையில் அனைத்து அணிகளும் பயனடையும் வகையில் பொருளாதார கொள்கையை நாம் கண்டறிய வேண்டும். பெரிய அணிகளான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ரசிகர்களுக்கும், பொருளாதாரத்திற்கும் எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால் சிறிய அணிகள் இன்னும் ஐசிசியின் பொருளாதார உதவியை நம்பியே உள்ளன. அதனால் அனைத்து அணிகளுக்கும் சமமான பங்கில் உதவி கிடைக்க வேண்டும்.

கிரிக்கெட்டின் வடிவங்களில் மாற்றங்கள் வேண்டும் என நினைக்கிறேன். கிரிக்கெட்டிற்கு அமெரிக்காவில் பெரும் வியாபாரம் உண்டு. அதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு கிரிக்கெட் உலகத்தை வேறு கோணத்தில் பார்க்க வேண்டும்'' என்றார்.

இதையும் படிங்க:வெஸ்ட் இண்டீஸ் ஜெர்சியில் இடம்பெறவுள்ள #BlackLivesMatter லோகோ

ABOUT THE AUTHOR

...view details