தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் சாதிக்கும்! - வெஸ்ட் இண்டீஸ்

லண்டன் : உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி மற்ற அணிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலைக் கொடுக்கும் என தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆலன் டொனால்டு தெரிவித்துள்ளார்.

ஆலன் டொனால்டு

By

Published : Mar 20, 2019, 11:28 PM IST

மே மாதம் தொடங்கவுள்ள உலகக்கோப்பையை வெல்லும் அணி எது என பல முன்னாள் வீரர்கள் கருத்துக் கூறி வருகின்றனர். அதில் பல முன்னாள் வீரர்கள் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகளே உலகக்கோப்பையை வெல்லும் ஆதரித்து பேசினர். ஆனால் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஆலன் டொனால்டு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆதரவு தெரிவித்து, மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசுகையில், வெஸ்ட் இண்டீஸ் அணியை கவனித்து பாருங்கள். அந்த அணியில் ஏதோ ஒரு புதிய ஒளி உருவாகியுள்ளது. எனக்கு தெரிந்தது, அனைவருக்கும் சில நாட்களுக்கு பின்னர் தெரிய வரும். உலகக்கோப்பையில் அனைத்து அணிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அச்சுறுத்தல் கொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

கிறிஸ் கெய்ல்

மேலும், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடும் லெவனை இறுதி செய்வதில் சரியான முடிவினை எடுக்க தவித்து வருகிறார்கள். இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் சாதகம் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிபடுத்தி 2-2 என சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details