தமிழ்நாடு

tamil nadu

ஸ்காட்லாந்து முன்னாள் வீரருக்கு கோவிட்-19 உறுதி

By

Published : Mar 21, 2020, 1:19 PM IST

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் ஸ்காட்லாந்து வீரர் மஜித் ஹக், தனக்கு கோவிட்-19 பெருந்தொற்று இருப்பதாகவும், தற்போது அதற்காக சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அறிவித்துள்ளார்.

Former Scotland cricketer Majid Haq diagnosed with coronavirus
Former Scotland cricketer Majid Haq diagnosed with coronavirus

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஸ்காட்லாந்து அணியின் முன்னாள் வீரர் மஜித் ஹக் தனக்கு கோவிட்-19 பெருந்தொற்று இருப்பதை உறுதிசெய்துள்ளார்.

முன்னாள் ஸ்காட்லாந்து வீரர் மஜித் ஹக்

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பாக்கத்தில், “கோவிட்-19 பெருந்தொற்று பரிசோதனையில் தனக்கு பெருந்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராயல் அலெக்சாண்ட்ரா மருத்துவமனையில் தன்னை சரியாகக் கவனித்துக் கொண்ட அனைத்து ஊழியர்களுக்கும் நன்றிகள். உங்களது அதரவால் நான் விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன். இன்ஷா அல்லா உன்னுடைய தயவால் கருஞ்சிறுத்தை விரைவில் குணமடைந்து திரும்புவேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மஜித் ஹக் ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணிக்காக 54 ஒருநாள் போட்டிகள், 24 டி20 போட்டிகளில் களமிறங்கியுள்ளார். மேலும் இவர் கடைசியாக 2015ஆம் ஆண்டு நியூசிலாந்து, ஆஸ்திரேலிய நாடுகள் இணைந்து நடத்திய ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்காக பெங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சூதாட்ட சர்ச்சை: உமர் அக்மலுக்கு வாழ்நாள் தடைக்கு வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details