இந்திய பெண்கள் அணியின் சச்சின் என போற்றப்பட்ட மித்தாலி ராஜ். இவரது தலைமையிலான இந்திய அணி முதன் முதலாக 2006ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியில் பங்கேற்றது.
இதுவரை மித்தாலி ராஜ் 32 சர்வதேச டி20 போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக பணியாற்றியவர். இவர் 2012, 2014, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்று டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை அணியை வழிநடத்தியவர் ஆவார்.
இதுவரை 88 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மித்தாலி 2364 ரன்களை அடித்துள்ளார். இந்திய அளவில் மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்கள் அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்.
2018ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டிவரை இந்திய அணியை அழைத்துச் சென்றவர். இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரையிறுதிப் போட்டியிலிருந்து விளையாட வாய்ப்பு வழங்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டார்.
தற்போது 36 வயதாகும் மித்தாலி ராஜ் இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் 17 முறை அரைசதம் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.