வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன.
இதனிடையே இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இரண்டு அணிகளின் கேப்டன்களும் முதல் பந்திலேயே டக் அவுட்டாகினர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் களமிறங்கிய கோலி, பொல்லார்ட் வீசிய ஸ்லோயர் பந்தில் ரோஸ்டான் சேஸிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். விசாகப்பட்டினத்தில் கடந்த ஐந்து போட்டிகளில் மூன்று சதம், இரண்டு அரைசதம் என 556 ரன்கள் குவித்திருந்த அவர் இம்முறை டக் அவுட்டானது அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது.