பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த வங்கதேசம், மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வாரம், பிசிபி(பங்களாதேஷ் கிரிக்கெட் போர்ட்) பாகிஸ்தானின் பாதுகாப்பை காரணம் காட்டி டெஸ்ட் போட்டியை பொதுவான இடத்தில் வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தது.
இதனால் கோபமடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷசன் மணி, பாகிஸ்தான் பாதுகாப்பானது என்பதை நாங்கள் நிரூபித்து விட்டோம். எந்த அணி பாகிஸ்தான் வர மறுக்கிறதோ, அந்த அணி இங்கு பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் இந்த நேரத்தில் பாகிஸ்தானைவிட இந்தியாதான் மிக மிக அதிகமான பாதுகாப்பு அச்சுறுத்தல் கொண்ட நாடு என கடுமையாக சாடியிருந்தார்.