தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆட்டத்தின் முடிவை மாற்றிய தோனியின் மூன்று முக்கிய முடிவுகள்! - தோனியின் சாதனைகள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று தனது 39ஆவது பிறந்தநாள் கொண்டாடி வரும் நிலையில், ஆட்டத்தின் முடிவை மாற்றிய அவரது மூன்று முக்கிய முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்...

Three bold decisions of MS Dhoni as a captain which changed the course of game
Three bold decisions of MS Dhoni as a captain which changed the course of game

By

Published : Jul 7, 2020, 7:24 PM IST

தனது சிறப்பான பேட்டிங், விக்கெட் கீப்பிங், இவற்றுடன் சிறந்த கேப்டன்சிப்பாலும் இந்திய அணிக்கு பல வெற்றிகளைத் தேடித்தந்தவர் தோனி. அவரது தலைமையின் கீழ் இந்திய அணி மூன்றுவிதமான உலகக்கோப்பை தொடர்களையும் வென்றது மட்டுமல்லாமல், டெஸ்ட் போட்டிகளில் முதல் இடத்தைப் பிடித்து அசத்தியது.

ஆட்டத்தின் இக்கட்டான சூழ்நிலையில் அவர் எடுத்த துணிச்சலான முடிவுகள் இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்தது மட்டுமல்லாமல், பின்னாள்களில் சரித்திரமாகவும் மாறியுள்ளன. அந்த வகையில் ஆட்டத்தின் போக்கை அவரது மூன்று முக்கிய முடிவுகள் குறித்து பார்ப்போம்.

2007 டி20 உலகக்கோப்பை ஃபைனல்:

ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோனி எடுத்த முடிவு அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பாகிஸ்தான் அணியின் வெற்றிக்குக் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹர்பஜன் சிங்தான் கடைசி ஓவர் வீசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஏற்கனவே ஹர்பஜன் சிங்கின் ஓவரை மிஸ்பா உல் ஹக் வெளுத்து வாங்கியதால், அவருக்குப் பதிலாக ஜோகிந்தர் சர்மாவை கடைசி ஓவரை வீச வைத்து இந்திய அணிக்கு டி20 உலகக்கோப்பையைப் பெற்றுத்தந்தார். கேப்டனாக தனது முதல் அசைன்மெண்ட்டிலேயே அவர் வெற்றிக்கண்டார்.

2013 சாம்பியன்ஸ் டிராபி: இஷாந்த் சர்மா மீது நம்பிக்கை வைத்த தோனி

மழை காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி டி20 போட்டியாக மாறியது.130 ரன்கள் இலக்குடன் விளையாடிவந்த இங்கிலாந்து அணிக்குக் கடைசி மூன்று ஓவர்களில் 28 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு தலா ஒரு ஓவர் மிதமிருந்த நிலையில் அவர் 18ஆவது ஓவரை வீச இஷாந்த் சர்மாவை தேர்வு செய்தார் தோனி.

அப்போட்டியில் இஷாந்த் சர்மா முதல் 3 ஓவர்களில் 28 ரன்கள் வழங்கிய போதும், தோனி அவர்மீது நம்பிக்கை வைத்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் சிக்ஸரையும் அதற்கடுத்த இரண்டு பந்துகளை வைடும் வழங்கியதால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 16 பந்துகளில் 20 ரன்கள் தேவைப்பட்டன.

இச்சூழலில், செட் பேட்ஸ்மேன்களான மோர்கனையும், ரவி பொபாராவையும் அடுத்தடுத்து அவுட் செய்து ஆட்டத்தின் போக்கை இந்தியாவின் பக்கம் திருப்பினார் இஷாந்த். இறுதியில் இந்திய அணி இப்போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது.

2011 உலகக்கோப்பை: பேட்டிங் ப்ரோமோஷன்

2011இல் இலங்கை அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் யுவராஜ் சிங்கிற்குப் பதிலாக அவர் ஐந்தாவது வரிசையில் களமிறங்கிய கதை அனைவருக்கும் தெரிந்ததே.

275 ரன்கள் இலக்கில் கவுதம் கம்பீருடன் சிறப்பான பார்ட்னர்ஷிப்பில் ஈடுபட்டார் தோனி. கம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழந்தபோதும் தோனி யுவராஜ் சிங்குடன் பார்ட்னர்ஷிப் வைத்து இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார்.

குறிப்பாக, குலசேகரா வீசிய பந்தை வின்னிங் ஷாட்டாக அவர் லாங் ஆன் திசையில் சிக்சருக்கு பறக்கவிட்டபோது ஒட்டுமொத்த மைதானம் மட்டுமின்றி, நாடே அதிர்ந்தது. ”Dhoni finished the things off in style magnificent strike into the crowd, India lifted the worldCup after 28 years, the party starts in the dressing room, and the Indian Captain who has been magnificent in the night of the finals” என்று ரவி சாஸ்திரியின் கமெண்ட்ரி மனப்பாடப் பாடல் போல் ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்தது.

தனது கேப்டன்சியில் அவர் பல முடிவுகள் எடுத்து இருந்தாலும், இந்த முடிவு இந்திய அணியின் 28 ஆண்டு கால கனவை நனவாக்கியது என்று கூறலாம்.

ABOUT THE AUTHOR

...view details